Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டி விநாயகர் ஊர்வலத்தில் கலவரம், போலீஸ் தடியடி

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: ஊட்டியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கலவரத்தை ஒடுக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் 22 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஊட்டியில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நேற்று நடந்தது. தேவாங்கர் திருமண மண்டபத்தில் இருந்து சுமார் 75 விநாயகர் சிலைகளின் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் மாநில இணை அணைப்பாளர் குமரன் துவக்கி வைத்தார்.

இந்த ஊர்வலத்தை முன்னிட்டு ஊட்டியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. நீலகிரி எஸ்பி கபில் சராட்ஹர் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தார்.

பேண்ட் இசை முழங்க ஊர்வலம் கமர்சியல் ரோடு, காபி ஹவுஸ் ஜங்கஷன், மாரியம்மன் கோவில், மெயின் பஜார் மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றை தாண்டி வந்தது. அங்கு பள்ளிவாசல் இருந்ததால் போலீசார் பேண்ட் இசைக்க அனுமதி மறுத்தனர்.

மேலும், ஊர்வலம் வந்தவர்கள் வைத்திருந்த பேண்ட் மற்றும் இதர கருவிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் ஊர்வலம் பள்ளிவாசலை தாண்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தது. இதையடுத்து ஊர்வலத்தில் இருந்தவர்கள் பேண்ட் கருவிகளை போலீசார் தர வேண்டும் என கோரி சாலை மறியல் செய்தனர்.

பின்னர் சிறிது நேரம் சாலை மறியல் நிறுத்தப்பட்டு, ஊர்வலம் தொடர்ந்தது. ஊர்வலம் மார்க்கெட் பக்கம் வந்தபோது கூட்டத்தில் இருந்தவர்கள் ஜெய் காளி என கோஷமிட்டு கொண்டே சென்றனர். அப்போது மார்க்கெட்டில் இருந்த ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது கற்களை வீசினர்.

இதையடுத்து போலீசார் மார்கெட்டில் இருந்தவர்களை விரட்ட முயன்றனர். அப்போது அவர்கள் போலீசார் மீது தேங்காய் மற்றும் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் மார்க்கெட்டிலும் தடியடி நடத்தினர்.

இந்நிலையில் ஊர்வலத்தில் சென்றவர்களும் தொடர்ந்து கோஷமிட்டதால், போலீசார் அவர்கள் மீதும் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதையடுத்து மார்க்கெட் பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவானது.

விநாயகர் சிலை ஏடிசி பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால், ஊர்வலத்தில் வந்தவர்கள் சிலைகளை கரைக்க முடியாது என கூறி சிலைகள சாலையில் வைத்து மறியல் செய்தனர்.

சிலையை கரைத்த போலீசார்...

இதையடுத்து போலீசாரோ நேற்று இரவு சுமார் 7.20 மணிக்கு சிலைகளை லாரியில் ஏற்றி காமராஜ் சாகர் அணைக்கு கொண்டு சென்று கரைத்தனர்.

பின்னர் எஸ்பி கபில் சராட்ஹர், விஸ்வ இந்து பரிஷத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து சாலை மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

போலீஸ் தடியடியில் காயமடைந்த 22 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று பந்த்...

இந்நிலையில் இன்று ஊட்டியில் முழு பந்த் நடத்த இரு பிரிவினரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+