போலீஸ் தடியடி: திக்விஜய்சிங் மண்டை உடைந்தது
போபால்: காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரும், முன்னாள் மத்திய பிரதேச முதல்வருமான திக்விஜய் சிங் மீது போலீஸ் தடியடி நடத்தியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஆனால், இக்குற்றச்சாட்டுக்கு பாஜக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச முதல்வராக 1993 முதல் 2003 வரை இருந்தவர் திக்விஜய் சிங். தற்போது காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ராஜ்கார்க் பகுதியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் செய்தனர். அவர்கள் மின் பற்றாக்குறை, வறட்சி போன்றவற்றை தடுக்க பாஜக தவறிவிட்டதாகக் குறை கூறினர். இந்த போராட்டத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மதியம் சுமார் 2.30 மணிக்கு அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு கொடுக்க சென்றனர். ஆனால், அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து போலீசாருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். அப்போது திக்விஜய் சிங்கின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு நெற்றியில் இரண்டு தையல் போடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சம்பவத்தை மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் ஜகதீஷ் தியோரா மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் வீசிய செங்கல் தான் திக்விஜய் சிங்கின் மண்டையை உடைத்துள்ளது என்றார்.
திக்விஜய் சிங் கூறுகையில்,
எனது கட்சிகாரர் என் மீது செங்கல் வீசியாதாக சொல்வது தவறானது. இப்படி ஒரு கேள்வி எழ வாய்ப்பே இல்லை. கூட்டம் அமைதியாக நடந்தது. ஆனால், போலீசார் தான் காங்கிரஸ் தொண்டர்கள் மீது இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டனர் என்றார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications