காகித ஆலை ஊழியர்கள் பணி நிரந்தரம்-கரூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: கரூர் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் 1600 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி வரும் 4ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
கரூர் காகிதபரத்தில் எம்ஜிஆர் காலத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் துவக்கப்பட்டது. கரும்பை மூலப்பொருளாக கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 100 கோடி லாபம் ஈட்டுகிறது. அன்னிய செலாவானியும் அதிகம் கிடைக்கிறது.
இங்கு தற்போது சுமார் 1,700 நிரந்தரத் தொழிலாளர்களும், 1,600 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். இருவரும் ஒரே வேலையை செய்தாலும் பாதி பேருக்கு அதிக சம்பளமும், பாதி பேருக்கு குறைந்த சம்பளமும் வழங்கப்படுகிறது. இதனால் ஒப்பந்த தொழிலாளர்கள் மனதில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அவர்கள் திமுக அரசிடம் கோரிக்கை வைத்தும் எதுவும் நடக்கவில்லை. இந்த ஆண்டு நிறுவனத்தின் வெள்ளி விழா ஆண்டாக இருப்பதால் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய திமுக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இதற்காக மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் வரும் 4ம் தேதி மாலை 4 மணி அளவில் அந்த நிறுவனத்தின் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டம் கழக கொள்கை பரப்புச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத்தலைவருமான தம்பிதுரை எம்.பி., தலைமையிலும், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச்செயலாளர் சின்னசாமி எம்எல்ஏ மற்றும் கரூர் மாவட்ட கழகச்செயலாளர் செந்தில்பாலாஜி எம்எல்ஏ ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications