சோகத்தில் பைலட்டுகள், அதிகாரிகளின் குடும்பங்கள்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன் சேர்ந்து ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இரு பைலட்டுகள், இரு அதிகாரிகளின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரை செலுத்தியவர் கேப்டன் எஸ்.கே.பாட்டியா. துணை கேப்டனாக இருந்தவர் எம்.எஸ். ரெட்டி. ஹெலிகாப்டரில் முதல்வரின் முதன்மைச் செயலாளர் சுப்ரமணியம், தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜான் வெஸ்லி ஆகியோரும் இருந்தனர்.
நால்வரின் குடும்பங்களும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளன. சாந்தி நகரில் உள்ள வெஸ்லியின் வீட்டில் பெரும் திரளான உறவினர்கள், நண்பர்கள், சக காவல்துறையினர் குழுமியுள்ளனர்.
வெஸ்லியின் வீட்டுக்கு அமைச்சர்கள் சுதர்சன் ரெட்டி, கொண்டா சுரேகா ஆகியோர் வந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
வெஸ்லிக்கு மனைவி, 10 வயது மகன், 6 வயது மகள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications