தடம் மாறிப் போய் மலையில் மோதிய ஹெலிகாப்டர்
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் தனது பாதையிலிருந்து கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர் தூரத்திற்குப் பாதை மீறிப் போய் மலையில் மோதியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஹைதராபாத்திலிருந்து கிளம்பிய அந்த ஹெலிகாப்டர் கிழக்கு நோக்கி சித்தூர் சென்று கொண்டிருந்தபோது கர்னூலிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவுக்கு தடம் மாறி நல்லமலா காட்டுப் பகுதியில் பயணித்துள்ளது. ருத்ரகொடுரு என்ற இடத்தில் தான் அது தடம் மாறியுள்ளது.
தடம் மாறி பயணித்த ஹெலிகாப்டர் திடீரென குறுக்கிட்ட மலையில் மோதி உடைந்து நொறுங்கியுள்ளது.
இதுகுறித்து ஆந்திர நிதியமைச்சர் ரோசய்யா கூறுகையில், மலையில் ஹெலிகாப்டர் மோதியவுடன் வெடித்துச் சிதறியுள்ளது. அதில் பயணம் செய்த ஐந்து பேரும் உடல் கருகி இறந்துள்ளனர் என்றார்.
மோசமான வானிலையால் கரு மேகங்கள் சூழ்ந்ததால், ஹெலிகாப்டர் தடம் மாறிப் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரின் வால் பகுதி மட்டுமே முழுமையாக உள்ளது. மற்ற பாகங்கள் அனைத்தும் துண்டு துண்டாக சிதறிப் போய் விட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications