2 மாதத்தில் இந்தியா-இலங்கை கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்
கொழும்பு: இந்தியா, இலங்கைக்கு இடையே சிறைக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் விரைவில் செய்து கொள்ளப்படும் என தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தையில் இரு நாட்டு வெளியுறவு துறை அமைச்சகமும் ஈடுபட்டு வருகின்றன.
இது குறித்து இந்தியாவுக்கான இலங்கை தூதராக பதவியேற்கவுள்ள பிரசாத் காரியவாசம் கூறுகையில்,
இந்தியா, இலங்கைக்கு இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அது தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது. அதன் வரைவு அட்டார்னி ஜெனரலின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும்.
ஆனால், அந்த ஒப்பந்தம் எங்கு கையெழுத்தாகும், யார் கையெழுத்திடுவார்கள் போன்றவை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த ஒப்பந்தம் மூலம் ஒரு நாட்டை சேர்ந்த குடிமகன் இன்னொரு நாட்டில் தண்டிக்கப்பட்டால், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலத்தின் மீதியை தங்களது சொந்த நாட்டுக்கு சென்று அனுபவிக்கலாம் என்றார்.
இந்த ஒப்பந்தம் குறித்து வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூர், இலங்கையில் சிறையில் இருக்கும் இந்தியர்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்த கோழிக்கோடு அபூபக்கர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில்,
இலங்கையில் போதை மருந்து கடத்தியது போன்ற கடுமையான குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை இந்தியா கொண்டு வர முடியாது.
ஆனால், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் முடிந்துவிட்டால், மற்ற குற்றவாளிகளை இந்தியாவுக்கு அழைத்து வர முடியும் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications