விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தாக்குதல்-வி.எச்.பி. கண்டனம்
சென்னை: ஊட்டி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு விஸ்வ இந்து பரிஷத் தலைவர் வேதாந்தம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,
நெடுஞ்சாலை வழியாக சமய ஊர்வலம் நடத்த இந்துக்களுக்கு உரிமை உள்ளது என்பதை நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 23ம் தேதி விநாயக சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் அது விசர்ஜனம் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் விசர்ஜன பூஜைக்கு அங்கிருந்த முஸ்லிம் அன்பர்கள் திரண்டு வந்து பள்ளிவாசல் முன்பாக உற்சாகமாக வரவேற்பு அளித்திருக்கிறார்கள்.
ஊர்வலம் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளித்தனர். இது சமுதாய நல்லிணக்கத்துக்கு வழி வகுக்கும் செயலாகும். அவர்களுக்கும், அப்பகுதி காவல் துறையினருக்கும் எங்களது பாராட்டுக்களை தெரிவிக்கிறேன்.
ஆனால், ஊட்டி, திருப்பூர், திட்டுவிளை, திருவிதாங்கோடு ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் விநாயகர் சிலை விசர்ஜன விழாவின் போது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
திண்டுக்கல்லில் விழா முஸ்லிம் அன்பர்களின் சிறப்பான ஒத்துழைப்புடன் நடந்தது என்றால் ஏன் மற்ற ஊர்களில் நடத்த முடியாது. அவ்வாறே மற்ற ஊரிலும் செல்ல முடியும். செல்ல வேண்டும்.
இந்து மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் முஸ்லிம்களோ, அரசு அதிகாரிகளோ செயல்பட கூடாது. அவர்கள் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் செயல்பட வேண்டும் என விஸ்வ இந்து பரிஷத் சார்பாக வலியுறுத்துகிறேன் என்றார் வேதாந்தம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications