ரெட்டி மறைவால் அதிர்ச்சி - இதுவரை 60 ஆதரவாளர்கள் மரணம்!
ஹைதராபாத்: ராஜசேகர ரெட்டியின் திடீர் மறைவால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஆந்திராவில் இதுவரை 60 பேர் இறந்துள்ளனர்.
கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் மட்டும் 9 பேர் இறந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜக்கம்புடி ராம் மோகன் ராவ், ரெட்டி மரணச் செய்தியைக் கேட்டதும் மயக்கம் அடைந்து விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இறந்த 9 பேரில் 7 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். 2 பேர் சோகம் தாங்க முடியாமல் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை செய்து கொண்டவர்கள்- ஏசுபாபு(20), அசந்தா ராமகிருஷ்ணா (49).
மாரடைப்பால் இறந்தவர்கள் - முடிதிருத்துனர் ராஜி (40), துளசிவேனி(56), ராதாகிருஷ்ணா (62), சத்யநாராயணா (45), ஸ்ரீராமுலு (50), வெங்கண்ணதோரா (50), திருப்பதி ரெட்டி (70).
இதேபோல, மாநிலம் முழுவதும் மொத்தம் 60 பேர் ரெட்டி மரணத்தைத் தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் குண்டூர், கிழக்கு கோதாவரி, ஹைதராபாத், ரங்காரெட்டி, பிரகாசம், மேடக், நல்கொண்டா, கரீம் நகர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மாரடைப்பால் இறந்தவர்களில் சிலர், ரெட்டி அறிமுகப்படுத்திய ஆரோக்கியஸ்ரீ என்ற இலவச இருதய அறுவைச் சிகிச்சை திட்டத்தின் கீழ் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
தற்கொலை வேண்டாம் - மகன் கோரிக்கை
இதையடுத்து ராஜசேகர ரெட்டி மறைவால் அதிர்ச்சி அடைந்துள்ள தொண்டர்கள் யாரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது என்று அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற செயல்களால் எனது தந்தையின் ஆத்மா சாந்தி அடையாது. அவர் எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் இருந்தார். ஏழைகளின் உயர்வுக்காக பாடுபட்டார்.
எனவே அவரது ஆத்மா வருத்தப்படும்படியான காரியங்களில் யாரும் ஈடுபடக் கூடாது. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications