ஆந்திர முதல்வர் பதவி - மகனுக்குத் தர அமைச்சரவை விருப்பம்

கடப்பா எம்.பியாக தற்போது ஜெகன்மோகன் ரெட்டி உள்ளார். இவரையே அடுத்த முதல்வராக நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு கோரிக்கை விடுத்து இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதான் ராஜசேகர ரெட்டிக்கு செலுத்தும் சரியான அஞ்சலியாக இருக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சரும், ரெட்டியின் தீவிர ஆதரவாளருமான நாகேந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த எம்.எல்.ஏக்கள் வீரப்ப மொய்லியை சந்தித்து கோரிக்கை மனுவையும் கொடுத்துள்ளனர்.
மேலும், ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோரி சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் சிரஞ்சீவியையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
294 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர்.
அதேபோல எம்.பிக்கள் குழுவும் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று கோரி சோனியா காந்தியை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனராம்.
ஜெகன் மோகன் ரெட்டியையே முதல்வராக நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலும் ஆதரவு காணப்படுகிறது. இதுதொடர்பாக கட்சித் தலைமையகமான காந்தி பவன் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு ஜெகன் மோகன் மட்டுமே முதல்வராக்கப்பட வேண்டும். வேறு யாரையாவது நியமித்தால் ஏற்க மாட்டோம் என கோஷமிட்டனர்.
மேலும் ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் பிரசாரத்தில் குதித்துள்ளனர். அதில், இந்திரா இறந்தபோது ராஜீவ் காந்தி பிரதமராக்கப்பட்டார். அப்படி இருக்கையில் ஏன் ஜெகன் மோகன் ரெட்டியை இப்போது முதல்வராக்கக கூடாது என்று கேட்டுள்ளனர்.
தொழிலதிபரான ஜெகன்மோகன் ரெட்டி, தொலைக்காட்சி சானல் ஒன்றையும் சாக்ஷி என்ற நாளிதழையும் நடத்தி வருகிறார். கடப்பா தொகுதி எம்.பியாகவும் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தனதுத வாரிசாக ஜெகன் மோகன் ரெட்டியை முன்னிலைப்படுத்தி ரெட்டியும் செயல்பட்டு வந்தார். ஜனாக்கோஸரா ஜெகன், ஜெகன்கோஸரா ஜனா என்ற பிரசாரத்தையும் அவர் மேற்கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.
அதேசமயம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேறு சில தலைவர்களும் முதல்வர் பதவியைப் பிடிக்க அலை மோதி வருவதாகவும் கூறப்படுவதால், அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பு கூடியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications