அரசியல்வாதிகளுக்கு 60 வயதில் ஓய்வு - வலியுறுத்திய ரெட்டி!
ஹைதராபாத்: அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தவர் ராஜசேகர ரெட்டி. ஆனால் விதி, அவரது வாழ்க்கையை சரியாக 60வது வயதில் முடித்து விட்டது.
கடந்த 2003ல் எதிர்கட்சி தலைவராக இருந்த போது ஆந்திரா முழுவதும் சுமார் 1,400 கிமீ., தூரம் நடைபயணம் மேற்கொண்ட ராஜசேகர ரெட்டியின் கடும் முயற்சியின் பலனாக 2004ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆந்திராவில் பெரும் வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த ரெட்டி அந்தப் பெருமையை தலை மேல் வைத்து ஒருபோதும் கொண்டாடியதில்லை. தோற்றால் நான் பொறுப்பு, வென்றால் சோனியாவும், மன்மோகன் சிங்குமே பொறுப்பு என்று கூறி வந்தவர் அவர்.
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தலைவர்கள் 60வது வயதில் ஓய்வு பெற வேண்டும் என வலியுறுத்தி வந்தார் ரெட்டி. 2004ல் மூத்த தலைவர்கள் அரசியலை விட்டு வெளியேற ரெட்டி தனது 55வது வயதில் முதல்வர் ஆனார். அரசியல்வாதிகளின் ஓய்வு வயது 60 என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதை தன்னுடன் இருந்த அனைவருக்கும் உபதேசித்தார்.
இந்நிலையில் இந்தாண்டு மே 20ம் தேதி இரண்டாவது முறையாக ஆந்திராவின் முதல்வராக பதிவியேற்றார். அப்போதும் அவர் 60 நெருங்கிவிட்ட நிலையில் ஓய்வை அறிவிக்கலாம் என நினைத்திருந்தார்.
ஆனால், அவருக்கு பின் வேறு யாரும் ஆந்திர காங்கிரசில் சொல்லி கொள்ளும் அளவுக்கு பெரிய தலைவராக இல்லாத காரணத்தாலும், தொண்டர்களின் வேண்டுகோள் காரணமாகவும் பதவியை தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் தனது இரண்டாவது பதவி காலம் துவங்கி 100 நாட்கள் முடிந்த நிலையில் கொடூர விபத்தில் பலியானவர் விதி செய்த சதியால் 60வது வயதில் நிரந்தரமாக ஓய்வு பெற்றுள்ளார்.
சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர் என்ற பெயர் பெற்றவர் ரெட்டி. 60 வயதில் ஓய்வு என்பதை அவர்தான் சொல்லி வந்தார். இப்போது 60 வயதை எட்டிய நிலையில் நிரந்தரமாக ஓய்வுக்குச் சென்றது ஆந்திர மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications