தொடக்கப் பள்ளிகளுக்கு கூடுதல் ஆசிரியர்கள் - கருணாநிதி
சென்னை: 2 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் தொடக்கப் பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
நாளை நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை:
100 மாணவர்கள் வரை பயிலும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இதுவரை இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள். இதன் காரணமாக, சில பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம் 1:40 முதல் 1:50 வரை இருந்தது.
இது போன்று அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளில், செயல்வழிக்கற்றல் முறையை நடைமுறைப்படுத்துவதில் இருந்த பிரச்சினைகள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் எண்ணிக்கை 70க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இதுவரை இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்த நிலையை மாற்றி, மூன்று ஆசிரியர்கள் பணிபுரிவதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவின்படி, இரண்டு ஆசிரியர்கள் பணிபுரியும் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 70 மாணவர்களுக்கு மேல் பயிலும் 1400 பள்ளிகளில், இரண்டு ஆசிரியர்கள் என்பதற்குப் பதிலாக இனி மூன்று ஆசிரியர்கள் பணிபுரிவார்கள். இதன் மூலம் கற்பிக்கும் திறனும், மாணவர்கள் மீதான ஆசிரியர்கள் கவனமும் மேம்படும் என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications