தனுஷ்கோடி கடலில் தவித்த இலங்கை தமிழ் அகதி மீட்பு
ராமேஸ்வரம்: இலங்கையில் மீனவர்களால் இறக்கிவிடப்பட்டு நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த அகதி ஒருவர் தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து போலீசாரால் மீட்கப்பட்டார்.
இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்களை சித்ரவதை செய்து வருவதை அடுத்து, அங்குள்ள தமிழர்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக தமிழகத்துக்கு வருகின்றனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் பகுதி அரளிபட்டி என்னும் கிராமத்தில் வசித்து வந்த சிவகுமார் என்ற 33 வயது வாலிபர் ஒருவர் அப்பகுதியில் இருந்த மீனவர்களுக்கு ரூ. 40 ஆயிரம் கொடுத்து தமிழகத்துக்கு வர முயன்றுள்ளார்.
அவரை அழைத்து வந்த அந்த மீனவர்கள் தமிழக எல்லைப்பகுதியில் கடலில் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். தனுஷ்கோடி கடல் பகுதியில் தத்தளித்து கொண்டிருந்த அவரை பார்த்த தமிழக மீனவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அந்தத் தமிழர் பத்திரமாக மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டார்.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், செங்கல்பட்டு சிறப்பு முகாமிக்கு 16 இலங்கை அகதிகள், போலீஸ் விசாரணையில், அவர்களுக்கும், புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications