தமிழக அரசின் செஸ்னா, பெல் ஹெலிகாப்டர் பாதுகாப்பாக உள்ளன -அரசு
சென்னை: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து தமிழக அரிசன் வசம் உள்ள செஸ்னா விமானம் மற்றும் பெல் ஹெலிகாப்டரின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் இவை இரண்டும் மிகுந்த பாதுகாப்பான நிலையில், பறக்கும் தகுதியுடன் உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசிடம், செஸ்னா சிட்டேஷன் 5 விமானம் மற்றும் ஒரு பெல் ரக ஹெலிகாப்டர் உள்ளன. இவை இரண்டுமே கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அவர் பயணம் செய்வதற்காக வாங்கப்பட்டவை.
இவை இரண்டும் பத்திரமான நிலையில் இருப்பதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த இரண்டையும் பராமரித்து, பாதுகாக்கும் பணியை மேற்கொள்ள விமானப்படை அதிகாரி ஒருவர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குரூப் கேப்டன் அந்தஸ்திலான அதிகாரி ஆவார்.
இருப்பினும் 2006ம் ஆண்டு முதல் (அதாவது பதவியேற்றது முதல்) ஹெலிகாப்டரையோ அல்லது செஸ்னா விமானத்தையோ முதல்வர் கருணாநிதி பயன்படுத்தவில்லை.
வழக்கமான விமானங்களிலோ அல்லது ரயில் மூலமாகவோதான் அவர் பெரும்பாலான பயணங்களை மேற்கொள்கிறார் என்றார்.
மேலும், முதல்வர் பயணத்திற்கு முன்பாக அவர் பயணம் செய்யவிருக்கும் வாகனம் உரிய முறையில் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications