மோசமான வானிலை-எஸ்எம் கிருஷ்ணா விமானம் கராச்சியில் அவசர தரையிறக்கம்

பிரேசிலுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவு செய்தி கேட்டு தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அவசரமாக துபாய் வழியாக டெல்லிக்கு புறப்பட்டார்.
துபாயில் இருந்து நேற்று மதியம் 3.40 மணிக்கு அவர் எமிரேட்ஸ் விமானத்தில் கிளம்பினார். இந்நிலையில் அந்த விமானம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற போது டெல்லி அருகே வான்பகுதியில் வானிலை மோசமாக இருப்பது தெரியவநத்து.
இதையடுத்து அந்த விமானத்தை கராச்சியில் தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி கிடைத்ததை அடுத்து விமானம் இரவு 10.35 மணிக்கு கராச்சியில் தரையிறக்கப்பட்டது.
விமானத்திலிருந்து யாரும் கீழே இறங்க அனுமதிக்கப்படவில்லை. சுமார் ஒரு மணி நேரமாகியும் வானிலை சீராகாததை தொடர்ந்து விமானம் மீண்டும் இரவு சுமார் 11.44 மணிக்கு துபாய்க்கு திரும்பிச் சென்றது.
பின்னர் கிருஷ்ணா உள்ளிட்டோர் ஈகே510 விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் பெர்வெஸ் கூறுகையில்,
விமானம் மோசமான வானிலை காரணமாக தான் கராச்சியில் இறங்கியது. விமானத்தில் ஆக்ஸிஜன் கட்டுபாட்டு பகுதியில் கோளாறு ஏற்பட்டதாக பாகிஸ்தான் மீடியாக்கள் வெளியிட்ட செய்தியில் உண்மை இல்லை என்று தெரிவித்தார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications