ரெட்டி: லண்டனில் இருந்து ஸ்டாலின் இரங்கல்
சென்னை: ஆந்திர முதல்வர் ராஜகேசர ரெட்டியின் மறைவுக்கு துணை முதல்வர் ஸ்டாலின் லண்டனில் இருந்து பேக்ஸ் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பலியானார். இதையடுத்து தற்போது லண்டனில் இருக்கும் துணை முதல்வர் ஸ்டாலின், ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமிக்கு பேக்ஸ் மூலம் இரங்கல் கூறியுள்ளார்.
அதில்,
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். செல்வாக்கு பெற்ற தலைவரான அவரது திடீர் மறைவு நம்ப முடியாததாக இருக்கிறது. எனது கவலையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை.
அவரது மறைவின் காரணமாக ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியிருக்கும் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும், ஆந்திர மக்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications