ஆந்திர அமைச்சர்கள் இன்று மீண்டும் பதவியேற்பு
ஹைதராபாத்: ராஜசேகர ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் இன்று மாலை மீண்டும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளவுள்ளனர்.
இந்த மறு பதவிப்பிரமாணம் தொடர்பாக கடந்த 3 நாட்ளாக பெரும் குழப்பம் நிலவி வந்தது.
அரசியல் சாசனச் சட்டப்படி, ஒரு முதல்வர் பதவியேற்றால், அவருக்குக் கீழ் உள்ள அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும்.
ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி திடீர் மரணமடைந்ததால், ரோசய்யா இடைக்கால முதல்வராகப் பதவியேற்றார்.
ஆனால் அமைச்சர்கள் யாரும் பதவிப்பிரமாணம் எடுக்கவில்லை. இதை ஆளுநர் என்.டி.திவாரியிடம் சட்ட நிபுணர்கள் எடுத்துரைத்தனர். இதையடுத்து அமைச்சர்கள் மீண்டும் பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும் என ரோசய்யாவிடம் ஆளுநர் தெரிவித்தார்.
ஆனால் இதை ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவு அமைச்சர்கள் ஏற்க மறுத்து விட்டனர். ரோசய்யாவின் கீழ் பதவிப்பிரமாணம் எடுக்க முடியாது என்று அவர்கள் கூறினர். இதனால் குழப்பம் ஏற்பட்டது.
தற்போது அந்தக் குழப்பம் தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிய நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மறு பதவிப்பிரமாணம் எடுக்கவுள்ளனர்.
ராஜசேகர ரெட்டி அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ரெட்டி ஆதரவாளர்கள். எனவே இவர்களில் எத்தனை பேர் இன்றைய மறு பதவிப்பிரமாணத்தில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications