15 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய நெல்லை பெண் கைது
நெல்லை: திருநெல்வேலியில் 15 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து, 50 பவுன் நகைகளை கொள்ளையடித்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மற்றும் தாழையுத்து பகுதிகளில் மீனா என்ற இளம்பெண் ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் இருந்து நகை, பணத்தை பறித்து கொண்டு மாயமாகி விட்டார்.
மேலும் அவர் பல வீடுகளி்ல் வேலைக்கு சேர்ந்து உரி்மையாளர்களின் நம்பகத்தன்மையை பெற்று பிறகு அவர்கள் கண் அயரும் நேரத்தில் நகைகளை திருடி கொண்டு தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது போலீஸில் 10 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதையடுத்து மீனாவை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் குணசீலன், துணை கமிஷனர் அவினாஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று விஎம் சத்திரம் பேருந்து நிலையத்தில் மீனா நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று மீனாவை கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனார். அப்போது மீனா, மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவித்துள்ளார்.
அவர் போலீஸாரிடம் கூறுகையில்,
இதுவரை 15 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளேன். அவர்களிடம் இருந்து நகைகளை திருடி விற்று ஆடம்பரமாக செலவு செய்து வாழ்ந்தேன். தற்போது பணம் காலியானதை தொடர்ந்து விஎம் சத்திரத்தில் ஒரு வீட்டில் வேலைக்கு சேர வந்தேன் என்றார்.
போலீஸார் அந்த பெண்ணிடம் இருந்து 15 பவுன் நகையை மீட்டனர். மேலும், 35 பவுன் நகைகளை விரைவில் மீட்க இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications