அதிக வருவாய் ஈட்டும் கிரிக்கெட் வீரர் டோணி: போர்ப்ஸ்

இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் வரிசையில், சச்சின், யுவராஜ், டிராவிட், கங்குலி ஆகியோரும் இந்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளனர்.
இது குறித்து போர்ப்ஸ் பத்திரிகை வெளியி்ட்டுள்ள பட்டியல்...
கிரிக்கெட் வீரர்களின் கடந்த 12 மாத வருமானத்தை வைத்து இது கணக்கிடப்பட்டுள்ளது. தேசிய அணியில் அவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், கிளப்கள் மூலம் கிடைக்கும் வருமானம், விளம்பரம் ஆகியவை கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டது.
முதல் நான்கும் இந்தியாவுக்கே...
அதிக வருமானம் கொண்ட கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் முதல் நான்கு இடங்களையும் இந்திய வீரர்களே பிடித்துள்ளனர்.
கேப்டன் டோணிக்கு வருமானமாக 10 மில்லியன் டாலர் கிடைத்துள்ளது. அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் வரிசையில் இவருக்கு தான் முதலிடம். அவர் அடிக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் சராசரியாக 5,426 டாலர் கிடைக்கிறது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு அடுத்தபடியாக 17 கார்பரேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் அவர் நடித்து வருகிறார்.
இரண்டாவது இடத்தில் 8 மில்லியன் டாலர் சம்பாதித்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இருக்கிறார். மூன்றாவது இடத்தை யுவராஜ் சிங்கும் (5.5 மில்லியன் டாலர்), நான்காவது இடத்தை ராகுல் டிராவிட்டும்(5 மில்லியன் டாலர்) பெற்றுள்ளனர்.
ஐந்தாவது இடத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆன்ட்ரூ பிளின்டாப் (4 மில்லியன் டாலர்) பிடித்துள்ளார். ஆறாவது இடத்தை முன்னாள் இந்திய கேப்டன் கங்குலியும்(3.5 மில்லியன் டாலர்), ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்கும் பிடித்துள்ளனர்.
எட்டாவது இடத்தை இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் (3 மில்லியன் டாலர்), ஆஸ்திரேலியாவின் பிரட் லீ ஆகியோர் பெற்றுள்ளனர். 10வது இடத்தில் ஆஸ்திரேலிய துணை கேப்டன் மைக்கேல் கிளார்க் (2.5 மில்லியன் டாலர்)இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications