காஷ்மீருக்குள் சீன ராணுவம் அத்துமீறல்-சிவப்பு சாயம் பூசி அடாவடி
இந்தியா, சீனா இடையே நெடுங்காலமாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் லைன் ஆப் ஆக்சுவல் கன்ட்ரோல் என்ற எல்லை பகுதி வரையறுக்கப்பட்டது. இதன்படி ஜம்மு-காஷ்மீரின் தெற்கு பகுதியில் கியா மலைப் பகுதி தான் இரு நாடுகளுக்கும் இடையே சர்வதேச எல்லையாக இருந்து வருகிறது.
சுமார் 22,420 அடி உயரத்தில் இருக்கும் இந்த மலைப் பகுதி ஹிமாச்சல பிரதேசத்தின் ஸ்பிட்டி, திபெத் மற்றும் காஷ்மீரின் லடாக் பகுதிகள் சேரும் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ஜுலு லாங் கணவாய் பகுதியில் ஊடுருவிய சீன ராணுவத்தினர் மலைப் பகுதிகளில் பாறைகள் மீது சிவப்பு வண்ணத்தில் மீது சீனா என்று எழுதியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய படையினர் இதைக் கண்டு அதிர்ந்தனர்.
இது போன்ற சிவப்பு சாயங்கள் இந்திய எல்லைக்குள் சுமார் 1.5 கிமீ. முதல் 1.7 கிமீ வரை எழுதப்பட்டிருப்பதாகவும், இந்த பகுதிக்குள் ஊடுருவிய சீன படையினர் தான் இந்த செயல் செய்திருப்பதகாவும் ராணுவ செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் பிரச்சனை குறித்து சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருப்பதாகவும், இது தொடர்பாக எதிர்ப்பைத் தெரிவிக்க மூன்று தளபதிகளை பீஜிங மற்றும் லாசாவுக்கு அனுப்பியிருப்பதாகவும் தெரிகிறது.
சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்துக்குள் சீன ஹெலிகாப்டர்கள் இரண்டு அத்துமீறி நுழைந்தது. இதை தொடர்ந்து தற்போது அந்நாட்டு ராணுவம் சிவப்பு சாயம் அடித்திருப்பது இரு நாட்டுக்கும் இடையிலான உறவில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருணாசலப் பிரதேசம் எங்களுடையது என்று சீனா கூறி வருவது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது அதன் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதும் நடந்து வருகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை













Click it and Unblock the Notifications