பெற்ற மகளை 10 வருடங்களாக கற்பழித்து வந்த நபர் கைது
புவனேஸ்வர்: ஒரிசாவைச் சேர்ந்த 58 வயது நபர் தனது மகளை பத்து வருடங்களாக கற்பழித்து சீரழித்து வந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்த அக்கிரம நபரின் பெயர் பிஷ்ணுமோகன் பான்டா. பட்ரக் மாவட்டம், ராஜ்குருபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.
இவரது 32 வயது மகள், சனிக்கிழமை கிராமத்தினர் சிலருடைய உதவியுடன் போலீஸில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், எனது தந்தை என்னை பத்து வருடங்களாக கற்பழித்து வந்தார். நான் 9வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது முதல் முறையாக அவர் என்னை பாலியல் ரீதியாக சீரழித்தார். அதன் பின்னர் என்னை மிரட்டி மிரட்டி தொடர்ந்து சீரழித்து வந்தார்.
இதை வெளியில் சொன்னால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என என்னை மிரட்டி வைத்திருந்தார். இந்த பத்து ஆண்டு காலத்தில் பலமுறை நான் கர்ப்பமானேன். அப்போதெல்லாம் என்னை ரகசியமாக கூட்டிச் சென்று கருக்கலைப்பு செய்து விடுவார்.
பின்னர் என்னை ஒரு ஏழைக்கு கல்யாணம் செய்து வைத்து, என்னையும், எனது கணவரையும் தன்னுடனேயே தங்க வைத்துக் கொள்ளவும், தொடர்ந்து என்னை தகாத உறவுக்கு உட்படுத்தவும் அவர் திட்டமிட்டார் என்று கூறியிருந்தார் அந்தப் பெண்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து பான்டாவைப் போலீஸார் கைது செய்தனர்.
தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications