பிராந்திய மொழிகளில் ரயில்வே தேர்வு-மம்தா
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: ரயில்வே தேர்வுகள் அனைத்து பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் ரயில்வே துறை இணை அமைச்சர் சுல்தான் அகமது கொடுத்த இப்தார் விருதில் ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
ரயில்வே பணிகளுக்காக ரயில்வே பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் இதுவரை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கேட்கப்பட்டு வந்தது. இனி அவை உருது உட்பட அனைத்தும் பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும்.
மேலும் சில்டா மற்றும் அஜ்மீர் ஷெரிப்புக்கு இடையே புதிய ரயில் ஒன்று வரும் 12ம் தேதி முதல் விடப்படும். ஆங்கில கால்வாயை மூன்று முறை நீந்தி கடந்த மேற்கு வங்க பெண் ராஷ்மி சர்மாவுக்கு ரயில்வேயில் வேலை வழங்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications