பெண்கள் டிவிக்கு, இளைஞர்கள் மதுவுக்கு அடிமை-ராமதாஸ்
தருமபுரி: நாட்டில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். அதேபோல் பெண்கள் டிவிக்கு அடிமைகளாக உள்ளனர். இதனால் சமுதாயம் கெட்டுப் போய் விட்டது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட பசுமை தாயகம் அமைப்பாளருமான இரா.தயாளன், யசோதா ஆகியோரின் திருமணம் தொப்பூரில் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்தார்.
அப்போது ராமதாஸ் பேசுகையில்,
நாட்டில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகிவிட்டனர். பெண்கள் டிவிக்கு அடிமையாக உள்ளனர். இதனால் தான் சமுதாயம் கெட்டுப் போய் விட்டது.
இளைஞர்கள் நாளுக்கு நாள் மதுவை தேடி அலைகிறார்கள். முன்பு, கிராம பகுதிகளில் 3 சதவீதம் பேர் மட்டுமே மது குடித்தனர். ஆனால் தற்போது 3 சதவீதம் பேர் மட்டுமே மது குடிக்காமல் இருக்கின்றனர்.
விழுப்புரத்துக்கும், தருமபுரிக்கும் போட்டி...
தற்போது விழுப்புரம் மாவட்டத்துக்கும், தருமபுரி மாவட்டத்துக்கும் ஒரு போட்டி ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால் மது விற்பனை போட்டியாகும். இது ஆரோக்கியமான செயல் அல்ல. மது குடும்பத்தை மட்டும் அல்ல. நாட்டையே அழித்து விடும்.
இளைஞர்கள் சாதி, மத பேதமின்றி சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications