ஜெட் ஏர்வேஸ் விமானிகள் 600 பேர் இன்று முதல் ஒட்டுமொத்த விடுப்பு!

இதுவரை 34 விமானங்கள் ரத்தாகியுள்ளன. சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை மற்றும் நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் ஜெட் ஏர்வேஸில் பயணிக்கக் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் இதனால் பெரும் தவிக்குள்ளாகியுள்ளனர்.
ஏர் இந்தியா உள்ளிட்ட இதர விமானங்களில் இந்தப் பயணிகளை ஏற்றி அனுப்ப ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் பேசி வருகிறது.
ஜெட் ஏர்வேஸில் சில தினங்களுக்கு முன் இரு மூத்த பைலட்டுகளை நீக்கியது நிர்வாகம். இவர்களை மறுபடியும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மற்ற பைலட்டுகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் நிர்வாகத் தரப்பிலிருந்து இதற்கு எந்த பதிலும் தரப்படாததால், இப்போது ஒட்டுமொத்தமாக விடுப்பில் செல்லும் டெக்னிக்கைக் கையாண்டுள்ளனர். ஸ்ட்ரைக் நடத்த ஏற்கெனவே நோட்டீஸ் தந்திருந்தது விமானப் பைலட்டுகள் சங்கம். இதனை உடனடியாக தொழிலாளர் நல ஆணையருக்கு அனுப்பிவிட்டது ஜெட் ஏர்வேஸ். எனவே 600 பைலட்டுகள் சிக் லீவ் என்று விண்ணப்பம் கொடுத்துவிட்டு பணிக்கு வராமல் நின்றுவிட்டனர்.
'இது திட்டமிட்ட ஸ்ட்ரைக்தான். நிர்வாகத்தின் நன்மதிப்பையும், செயல்பாட்டையும் குலைக்கும் செயல். இப்போது நிர்வாகத்தைச் சீரமைக்கும் பணியில் உள்ளது ஜெட் நிர்வாகம். இந்த நேரத்தில் பைலட்டுகள் இப்படிச் செய்வது சட்டவிரோதம். ஆனாலும் முடிந்தவரை அதிக அளவு விமானங்களை இயக்கிக் காட்டுவோம்' என ஜெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதே நேரம் விலக்கப்பட்ட பைலட்டுகளை மறுபடியும் பணிக்கு எடுப்பது குறித்து பேசலாம் என்று ஜெட் ஏர்வேஸ் தலாவர் நரேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஜெட் ஏர்வேஸில் மொத்தம் 1000 பைலட்டுகள் உள்ளனர். இவர்களில் 600 பேர் மாஸ் லீவில் சென்றுள்ளதால், மிச்சமிருப்பவர்களை வைத்து சமாளிக்க முயன்று வருகிறது ஜெட் ஏர்வேஸ்.
சென்னையில் 6 விமானங்கள் ரத்து:
பைலட்டுகளின் இந்த நடவடிக்கையால் சென்னையில் இருந்து புறப்படும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 3 சர்வதேச விமானங்கள் ஆகும்.
விமானத்துறை செயலருடன் கோயல் சந்திப்பு:
இந் நிலையில் விமானப் போக்குவரத்து துறை செயலாளரை சந்தித்து தனது நிறுவன விவகாரம் குறித்து ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல் பேச்சு நடத்தவுள்ளார்.
சட்டத்துக்கு புறம்பானது-நீதிபதிகள்...
இந் நிலையில் இந்த வேலைநிறுத்தம் சட்டத்துக்கு புறம்பானது. விமானிகள் உடனடியாக வேலைநிறுத்தத்தை கைவிட்டு வேலைக்கு திரும்ப வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்மா பாயுமா...
வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் (எஸ்மா) விமானிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications