Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரதட்சணை-மனைவியை கொடுமை செய்த ஐபிஎஸ் அதிகாரி

Subscribe to Oneindia Tamil

Samuel
சென்னை: கூடுதலாக வரதட்சணை கேட்டு ஐபிஎஸ் அதிகாரியான தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை அடித்து கொடுமை செய்து சித்திரவதை செய்ததாக மனைவி புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் தனது மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், இதுதொடர்பாக ஏற்கனவே குடும்ப நல கோர்ட்டை விவாகரத்துக்காக அணுகியிருப்பதாகவும் அந்தப் பெண்ணின் கணவர் கூறியுள்ளார்.

இந்தப் புகார் குறித்து சென்னை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, முத்தமிழ் நகர், வடக்கு அவென்யூ சாலையில் வசித்து வருபவர் சர்மிளா. கரூர் வைசியா வங்கியில் உதவி மேலாளராக இருக்கிறார்.

இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், என் கணவர் சாமுவேல். ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். ஜம்மு - காஷ்மீர் மாநிலப் பிரிவின் கீழ் வரும் ஐ.பி.எஸ் அதிகாரி.

எனது கணவர் கிறிஸ்தவ யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர். நான் இந்து யாதவா சமூகத்தைச் சேர்ந்தவர்.

எங்களுக்கு கடந்த பிப்ரவரி 2ம் தேதி சுயமரியாதை முறையில் திருமணம் நடந்தது. எழும்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் முதலிரவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நள்ளிரவில் போதையுடன் அறைக்கு வந்தார் சாமுவேல். பின்னர் ஆபாசமாக பேசியபடி, என்னையும், என் குடும்பத்தாரையும், கேவலமாக பேசினார்.

பின்னர் பிப்ரவரி 14ம் தேதி எனது கணவருடன் காஷ்மீர் சென்றேன். அங்கும் என்னை அடித்து உதைத்தார். எனது குடும்பத்தினரை கேவலமாகப் பேசினார்.

மேலும், எனது கணவர், போனில் யாரிடமோ, ஒரு பெண்ணை கொலை செய்து அதை விபத்தாக மாற்றி விடுவதாக பேசிக் கொண்டிருந்தார். அதை நான் கேட்டு பயந்து போனேன். என்னை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார் என்ற பயம் வந்து விட்டது.

சென்னையில் உள்ள என் குடும்பத்தாரை போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளி விடுவதாக மிரட்டினார். ஒரு மனநோயாளி போல் என்னிடம் நடந்து கொண்டார்.

கடும் குளிர்பிரதேசமான காஷ்மீரில், படுக்கையில் இருந்த என்னை நள்ளிரவில் கீழே தள்ளி விட்டு சித்திரவதை செய்தார். கடும் குளிரால் எனக்கு காய்ச்சல்வ ந்து விட்டது. ஆனால் சிகிச்சை பெறக் கூட அவர் அனுமதிக்கவில்லை.

இரவு நேரத்தில் வீட்டின் பால்கனியில் பல மணி நேரம் என்னை நிற்க வைத்து கொடுமைப்படுத்துவார்.

இதற்கிடையே, நான் சென்னைக்கு திரும்பினேன். என் பெற்றோரிடம், வரதட்சணை அதிகமாக வேண்டும் என கேட்டு மிரட்டினார்.

மதுரையில் உள்ள போலீஸ் கமிஷனர், மற்றும் சில அரசியல் பிரமுகர்கள், தன் குடும்பத்தினருக்கு நெருக்கம் என கூறி மிரட்டினார். என்னை ஏமாற்றி மோசடியாக திருமணம் செய்து, என் நகைகளை அபகரித்துக்கொண்ட அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்தப் புகாரை ஆணையர் அலுவலகம், குடும்ப நல வழக்குகளை விசாரிக்கும் பிரிவுக்கு அனுப்பப்பட்டது.

சர்மிளா புகார் கொடுத்ததை அறிந்ததும் சாமுவேல் சென்னை மத்திய குற்றப் பிரிவு உயர் அதிகாரிகளை அணுகி தனது தரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

அதில், எனது மனைவி சர்மிளா, பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார். எனது மனைவிக்கு இன்னொருவருடன் கள்ளத் தொடர்பு உள்ளது. அதை மறைக்கத்தான் இவ்வாறு நாடகமாடியுள்ளார்.

மனைவியை விவாகரத்து செய்ய, குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளேன். நீதிபதியின் முடிவுக்கு கட்டுப்படுவேன். என் மீதான புகாரை சட்ட ரீதியாக எதிர்கொள்ளவுள்ளேன் என்று தெரிவித்துள்ளார் சாமுவேல்.

இந்த விவகாரம் குறித்து மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில், சாமுவேல், 1999ம் ஆண்டு நேரடியாக தேர்வான ஐ.பி.எஸ்., அதிகாரி என தெரிய வந்துள்ளது.

அவரது மனைவி சர்மிளா கொடுத்துள்ள புகார், மத்திய குற்றப்பிரிவில் உள்ள வரதட்சணை தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புகார் கொடுத்த சர்மிளாவை அழைத்து விசாரிக்க, அப்பிரிவின் உதவி கமிஷனர் விமலாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாமுவேலிடமும் விசாரிக்க வரதட்சணை தடுப்புப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சாமுவேல், ஜம்முவில் நடந்ததைச் சொல்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இப்பிரச்னை விசாரணை அளவிலேயே உள்ளது. இருவரிடமும் விசாரிக்க வேண்டும். கோர்ட்டில் வழக்கு உள்ளதால், கோர்ட் முடிவை பொறுத்து வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்.

காவல் நிலையத்தி்ல விசாரணை...

இந்த நிலையில் ஆயிரம் விளக்கில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சாமுவேலும், சர்மிளாவும் இன்று வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

முதலில் தனித் தனியாகவும், பின்னர் இருவரும் சேர்த்து வைத்தும் விசாரிக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+