தகவல் அறியும் சட்டம் பயன்பாடு-தமிழகம் முதலிடம்
திருப்பூர்: தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்துவதில் நாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மாநில தகவல் கமிஷனர் பெருமாள்சாமி தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் உரிமை சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட 20 மனுக்கள் குறித்து மாநில தகவல் கமிஷனர் பெருமாள்சாமி விசாரணை நடத்தினார்.
பின்பு, அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த 2006 ஜனவரி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை தமிழகத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 600 மனுக்கள் தகவல் உரிமை சட்டத்தில் பெறப்பட்டுள்ளன. இதில் 86 ஆயிரத்து 300 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, அந்தந்த துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
22 ஆயிரத்து 500 மனுக்கள் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இவை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வராதவை ஆகும்.
வெளிப்படையான அரசு நிர்வாகம், ஊழல் ஒழிப்பு, அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து கொள்வதை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு இந்த சட்டம் உத்தரவாதம் தருகிறது. அரசு ரகசியங்கள் தொடர்பான சில துறைகளுக்கு, இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நபரின் உயிர், உடல், உடைமைகளுக்கு தீங்கு விளைவிக்கும் விளக்கங்கள், வியாபார ரீதியான ரகசியங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழகம், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு, தமிழர்களிடையே உள்ள விழிப்புணர்வே காரணம்.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேவையான தகவல் பெற, வெள்ளை பேப்பர் போதும். அதில், அத்துறையின் பொது தகவல் அதிகாரியின் முகவரியிட்டு, ரூ. 10 நீதிமன்ற முத்திரை ஒட்டி, அனுப்பினால் போதும்.
கருவூலத்தில் செலுத்தப்பட்ட சலான், டிடி ஆகியவற்றையும் கொடுக்கலாம். மேல்முறையீடு செய்ய, ஏற்கனவே செய்த மனுவின் ஜெராக்ஸ் இணைத்து விண்ணப்பிக்கலாம் என்றார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications