போலி ரேஷன் கார்டு ஒழிப்பால் ரூ. 3,000 கோடி மிச்சம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் பணியில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது. இதனால் அரசுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி மிச்சமடைந்துள்ளதாக உணவு துறை அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

போலி ரேஷன் கார்டுகளை தமிழகத்தில் இருந்து ஒழிக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் தொடங்கியது.

முதல் கட்டமாக திருச்சி, கோவை, சென்னை அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரேஷன் கார்டுகள் சரிபார்க்கும் பணிகள் நடந்தது. இதில் சுமார் 2.47 லட்சம் போலி அட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை உடனடியாக நீக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக மேலும் 10 மாவட்டங்களில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது 7.71 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் அடையாளம் காணப்பட்டன. தற்போது

தற்போது மூன்றாவது கட்டமாக மேலும் 20 மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் 70 சதம் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன.

கடைசி மற்றும் நான்காவது கட்ட போலி ரேஷன் கார்டு ஒழிப்பு பணி கடந்த 1ம் தேதி 6 மாவட்டங்களில் ஆரம்பமாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 1,326 அதிகாரிகள் ரேஷன் அட்டை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத இறுதிக்குள் இநத் பணிகளை முடிக்க திட்டமி்ட்டுள்ளோம். அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் ரூ.3 ஆயிரம் கோடி வரை மிச்சமாகியுள்ளது.

புதிய ரேஷன் கார்டு கேட்ட விண்ணப்பித்தவர்களில் 12 லட்சம் பேருக்கு புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 60 சதவீத மக்கள் ரேஷன் கடைகளில் கிடைக்கும் அத்திவாசிய பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

வறட்சி காரணமாக ரேஷன் கடைகளில் பருப்பு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. பருப்பு வகைகள் தட்டுபாடின்றி கிடைக்க தேவையான
நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது குறித்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+