இளைஞர்கள் இணைந்தால் தமிழகத்தில் காங். ஆட்சி-ராகுல்
நெல்லை: தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் வலுவடைந்தால் நிச்சயம் இங்கும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று கூறினார் ராகுல் காந்தி.
நேற்று பல்வேறு ஊர்களில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசினார். அதன் சுருக்கம்...
நாகர்கோவில்...
மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சமுதாயத்தில் அடித்தட்டு மக்களாகவே உள்ளனர். நான் இளைஞர் காங்கிரசில் இருந்தபோது குஜராத் சென்றிருந்தேன். அப்போது மீனவர்களை அங்கு ஒதுக்கி வைத்திருந்தனர். அப்போதுதான் மீனவர்களின் நிலையை நான் உணர்ந்தேன்.
குமரி மாவட்டமும் மீனவர்கள் அதிகமாக வாழும் மாவட்டம். எனவே தமிழ்நாட்டில் எனது சுற்றுப்பயணத்தை முதன்முதலில் குமரி மாவட்டத்தில் தொடங்கியுள்ளேன்.
கட்சிகளில் ஜனநாயகம் இல்லாமல் உள்ளது. ஜனநாயக முறையில் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவே இளைஞர் காங்கிரசில் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்தியாவில் ஏழை-பணக்காரர் என்ற வேறுபாடு இல்லாத நிலை உருவாக வேண்டும் என்பதே எனது எண்ணம். ஏழைகள் படும்பாடு வெளியே வருவதில்லை. அதை எப்படி மாற்றுவது? என்பதின் தேடல்தான் எனது சுற்றுப்பயணத்தின் நோக்கம்.
விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளிகள் ஆகியோரின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தால்தான் நாடு உயரும். இந்தியா வல்லரசாகும்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைப் போல, குஜராத் மீனவர்களுக்கு பாகிஸ்தான் கடற்படையினரால் ஏற்படுகிறது. எனவே இந்த 2 நாடுகளின் பிரச்சினைகள் பற்றியும் மந்திரிசபையில் சொல்லி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வேன்.
நெல்லை...
மாணவ, மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராகுல் அளித்த பதில்கள்..
கேள்வி: தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இதற்கு காரணம் தலைமையை, எங்களை போன்ற தொண்டர்கள் தொடர்பு கொள்ள முடியாததுதான். தலைமைக்கும், தொண்டர்களுக்கும் தொடர்பு இல்லாத நிலை இருக்கிறது. இது சரி செய்யப்படுமா?
பதில்: இந்த நிலை மாறும். இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தொண்டர்களுடன் நேரடி தொடர்பு வைத்து கொள்வார்கள். அதனால்தான் பஞ்சாயத்து அளவில் தேர்தல் நடத்தப்படுகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications