வாகன நடமாட்டத்தைக் கண்டறியும் பால்கன்-ஐ சென்னையில் அறிமுகம்
சென்னை: வாகனங்களின் இயக்கத்தைக் கண்காணிக்க உதவும் பால்கன்-ஐ தகவல் தொடர்பு சாதனத்தை (vehicle tracking system VTS) அமெரிக்கன் மெகாடிரான்ட்ஸ் இந்தியா (ஏஎம்ஐ) நிறுவனம் சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
பால்கன்-ஐ, முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைத்து, உருவாக்கப்பட்டு, தயாரிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் தனது உற்பத்திப் பிரிவை இதற்காக ஏஎம்ஐ அமைத்துள்ளது.
பால்கன்-ஐ அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் மச்சேந்திரநாதன் கலந்து கொண்டார்.
பால்கன்-ஐயின் சிறப்பம்சங்கள்...
- ஜிபிஎஸ் - ஜிஆர்எஸ் என இரு வசதிகளிலும் செயல்படக் கூடிய தகவல் தொடர்பு அமைப்பைக் கொண்டது பால்கன்-ஐ.
- முற்றிலும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் தயாரிப்பு என்பதால் மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்தது.
- வாகன நடமாட்டத்தை எளிதாக கவனித்து கண்காணிக்கும் வகையிலான இன்புட்- அவுட்புட் வசதிகள் உள்ளடக்கியது.
- பாதை மாறிப் போவது, அதி வேகமாக போவது, எரிபொருள் பயன்பாடு, பயண நேரம் உள்ளிட்டவற்றை சரியாக கண்காணித்து கட்டுப்படுத்தும் வசதிகள் அடங்கியுள்ளது.
- வாகனத்திலிருந்து கட்டுப்பாட்டு அறைக்கும், கட்டுப்பாட்டு அறையிலிருந்து வாகனத்திற்கும் இடையே எளிமையான தகவல் தொடர்புக்கு வசதி செய்யப்பட்டுள்ளதால், 24 மணி நேரமும் வாகனத்தின் நடமாட்டத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
- விற்பனைக்குப் பிந்தைய சர்வீஸ் உள்ளிட்ட சேவைகள், அப்கிரேட் செய்து கொள்வதற்கான எளிமையான நடைமுறைகள் என மிகவும் சவுகரியமான சேவையைக் கொண்டது பால்கன்-ஐ.
பால்கன்-ஐ குறித்து அமெரிக்கன் மெகாடிரன்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சங்கர் கூறுகையில்,
இந்தியாவில் விடிஎஸ் சந்தைக்கு நல்ல வரேவற்பு உள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை விரைவில் 35 மில்லியன் டாலரைத் தாண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இந்திய சந்தைக்கு முற்றிலும் ஏற்ற மாதிரியான தயாரிப்பாக பால்கன்-ஐ உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
ஏஎம்ஐ நிறுவனத்தின் இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீதரன் மணி கூறுகையில், இந்தியாவின் விடிஎஸ் சந்தையில் 40 சதவீதத்தை பால்கன்-ஐ பூர்த்தி செய்யும்.
பெயர் பெற்ற பிராண்ட் என்பதால் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளையும் நாங்கள் சிறப்பாக செய்வோம்.
விரைவில் அனைவருக்கும் ஏற்ற விலையில் நாடு முழுவதும் பால்கன்-ஐ விற்பனைக்கு விடப்படும்.
பால்கன்-ஐ குறித்த முழு விவரங்களை அறிய கீழ்க்கண்ட இணையதளத்திற்குச் செல்லலாம்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications