கேரளாவுக்கு படகில் வந்த 4 பேர் மாயம்-புலிகளா?

இலங்கையில் இருந்து நேற்று மாலை திருவனந்தபுரத்துக்கு அருகில் இருக்கும் விழிஞ்சம் துறைமுகம் பகுதிக்கு நான்கு பேர் படகில் வந்ததாக கேரள கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது.
அவர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால், அங்கு யாரும் இல்லை. அப்பகுதி முழுவதும் தீவிரமாக தேடிய போதும், அந்த 4 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் படகை கடலில் மூழ்கடித்து விட்டு வேறு எங்காவது மாயமாகி இருக்கலாம் என்றும், அவர்கள் விடுதலை புலிகளாக இருக்கலாம் என்றும் சந்தேகமடைந்துள்ளனர். மேலும், கேரளாவின் அனைத்து கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.
மேலும், போலீஸார் அருகில் உள்ள கோவாளம், சங்குமுகம், கொச்சி உள்ளிட்ட துறைமுக பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள போலீஸாருக்கும் சுங்கதுறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர்களும் தேடு்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அவர்கள் 4 பேரும் யார், எங்கு சென்றார்கள் போன்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள், கேரளாவில் இருக்கும் தமிழர்கள் யாருடனாவது தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு தலைமறைவாக இருக்கிறார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications