சென்னை வந்தும் கருணாநிதியை சந்திக்காத ராகுல் - திமுகவினர் அதிருப்தி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். பல்வேறு ஊர்களுக்குச் சென்று இளைஞர் காங்கிரஸார் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரை சந்தித்துப் பேசியுள்ளார்.
நேற்று சென்னைக்கு வந்தார். இரவு சென்னையில்தான் தங்கினார். ஆனால் முதல்வர் கருணாநிதியை அவர் சந்திக்கவில்லை. இது திமுகவினரை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
வழக்கமாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் யாராவது சென்னைக்கோ அல்லது தமிழகத்திற்கோ வந்தால் மறக்காமல் கருணாநிதியை சந்திப்பது வழக்கம். சத்தியமூர்த்தி பவனுக்குப் போகிறார்களோ இல்லையோ, கோபாலபுரத்திற்குப் போகத் தவற மாட்டார்கள்.
ஆனால் மிக முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, மரியாதை நிமித்தமாகக் கூட கருணாநிதியை சந்திக்காதது திமுகவினரை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாம்.
ராகுல் காந்தி கருணாநிதியை சந்திக்க இதுவரை நேரம் கேட்டு காங்கிரஸ் தரப்பில் தங்களை யாரும் அணுகவில்லை என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது. இன்றுடன் ராகுல் காந்தியின் தமிழக பயணம் முடிவடைவதால், கருணாநிதியை ராகுல் சந்திக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
முதல்வர் கருணாநிதியை ராகுல் காந்தி ஏன் சந்திக்கவில்லை என்று தெரியவில்லை. அதேசமயம், நேற்று பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு ராகுல் பேட்டி அளித்தபோது திமுகவுடன் நல்ல உறவு உள்ளது. மூத்த தலைவரான கருணாநிதியை நான் பலமுறை சந்தித்துள்ளேன். பல வழிகளில் என்னை அவர் வெகுவாக கவர்ந்துள்ளார் என்று பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications