எஸ்.எம்.எஸ். தொல்லை-புகார் கூறிய ஷீபாவைக் குறி வைத்த எஸ்.ஐ.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ஹக்கீம் என்ற பிரியாணிக் கடை அதிபர், ஷீபா என்ற பெண்ணுடன் கள்ளக் காதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இது ஷீபாவின் கணவர் ராபினுக்குத் தெரிய வந்ததும், அவர் மனைவியைக் கண்டித்தாராம். இதையடுத்து ஷீபா கள்ளக் காதலை கைவிட்டதாக தெரிகிறது.
ஆனாலும் ஷீபாவை மறக்க முடியாத ஹக்கீம், தொடர்ந்து ஷீபாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வந்துள்ளார். ஆனால் ஷீபா வர மறுத்து விட்டதாக தெரிகிறது.
இருந்தாலும் தொடர்ந்து ஹக்கீம் எஸ்.எம்.எஸ்.களாக அனுப்பி வந்ததால் கோபமடைந்த ஷீபா இதை தனது கணவரிடம் கூறியுள்ளார்.
ஆத்திரமடைந்த ராபின் தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து ஹக்கீமை கடத்திச் சென்று சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் ஹக்கீம் உயிரிழந்து போனார்.
இதையடுத்து உடலை அரக்கோணம் கொண்டு போய் ரயில்வே டிராக்கில் போட்டு விட்டு வந்து விட்டனர்.
இந்த நிலையி்ல் ஹக்கீம் கடத்தப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தியதில் ஷீபா, ராபின் மற்றும் ராபினின் நண்பரான சத்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் விசாரணையின்போது, ஒரு சப் இன்ஸ்பெக்டர்தான ஹக்கீமை கடத்திச் சென்று மிரட்ட ஐடியா கொடுத்ததாக தகவல் கிடைத்தது.
ஹக்கீமின் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காக ஷீபாவும், ராபினும், இந்த சப் இன்ஸ்பெக்டரை அணுகியுள்ளனர். அப்போது ஷீபாவைப் பார்த்த சப் இன்ஸ்பெக்டருக்கு அவர் மீது ஆசை வந்து விட்டது. அவரை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.
சப் இன்ஸ்பெக்டரின் ஆதரவோடுதான் ஹக்கீம் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடத்தி மிரட்டுவதோடு ராபின் மற்றும் குழுவினர் நின்று விடுவார்கள் என நினைத்திருந்தார் சப் இன்ஸ்பெக்டர். ஆனால் அவர்களை மூர்க்கமாக அடித்துக் கொலை செய்து விட்டதால் சப் இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியாகி விட்டாராம்.
ஷீபா விவகாரத்தில் சப் இன்ஸ்பெக்டரின் தலையீடு எந்த அளவுக்கு இருந்தது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications