ஊனமுற்ற மாணவருக்கு ரூ. 48,000 வழங்கிய ஸ்டெர்லைட்
தூத்துக்குடி: ஊனமுற்ற கல்லூரி மாணவர் ஒருவருக்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் கல்வி உதவி தொகையாக ரூ. 48 ஆயிரத்து 865 வழங்கியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு இலவச பாட புத்தகங்கள், மற்றும் சீருடைகளை வழங்கி வருகிறது.
மேலும், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு மேற்படிப்பிற்காக கல்வி ஊக்கத் தொகை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பொறியியல் தகவல் தொழில்நுட்பம் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த ராமராஜ் என்ற ஊனமுற்ற மாணவர் தனக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என ஸ்டெர்லைட் நிறுவனத்தி்ன் நிர்வாகத்துக்கு மனு அளித்தார்.
அதனை ஏற்று கொண்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவன செயல்பாடுகள் பிரிவு துணைத் தலைவர் பிரசாத் சூர்ய ராவ் அந்த மாணவருக்கு ரூ.48,865 வழங்கினார்.
மேலும், இந்த மாணவனுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கான கல்வித் தொகையை ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்க முன் வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மனிதவள பொது மேலாளர் ஜோசப் பீரீஸ், சமுதாய வளர்ச்சிப் பிரிவு தலைவர் ராஜசேகர பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications