'எய்ட்ஸ்' விளம்பரத்தில் ஹிட்லர்-ஸ்டாலின்!

ஜெர்மனியின் ஹம்பர்க்கைச் சேர்ந்த ரெஜன்போகன் என்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு நிறுவனம் இந்த விளம்பரத்தை உருவாக்கியுள்ளது.
வீடியோ விளம்பரத்தில் - ஒரு ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்கிறார்கள். காட்சியின் முடிவில் அந்த ஆண் தலையைத் தூக்கி புன்னகைக்கிறார். அது ஹிட்லரின் முகமாக உள்ளது.
விளம்பரத்தின் முடிவில், எய்ட்ஸ் ஒரு மகா கொலைகாரன் என்ற வார்த்தை வருகிறது.
அதேபோல போஸ்டர் விளம்பரத்தில் சதாம் உசேன், ஜோசப் ஸ்டாலின் ஆகியோரது படங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த விளம்பரத்தை உலக எய்ட்ஸ் தினமான டிசம்பர் 1ம் தேதி வரை அந்த நிறுவனம் காட்டவுள்ளது. இந்த விளம்பரத்தில் எந்தத் தவறும் இல்லை என்றும் அந்த நிறுவனம் வாதிடுகிறது.
பாதுகாப்பற்ற உறவு எவ்வளவு அபாயகரமானது என்பதை காட்டவே இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த நிறுவனம் கூறுகிறது.
விளம்பர நிறுவனத்தின் கிரியேட்டிவ் பிரிவு இயக்குநர் டிர்க் சில்ஸ் கூறுகையில், இந்த நோயின் அவலத்தையும், அசிங்கத்தையும் வெளிக்காட்டும் விதமாகவே சர்வாதிகாரிகளின் முகங்களை ஒத்தவர்களை இதில் இடம் பெறச் செய்தோம்.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சர்வாதிகாரிகள் எவ்வளவு பயங்கரமானவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அதே அளவிலான பயங்கரம் நிறைந்ததுதான் எய்ட்ஸ் என்பதை விளக்கவே இந்த உத்தி என்கிறார்.
ஆனால் இதுகுறித்து சர்ச்சையும் எழுந்துள்ளது. ஏற்கனவே எய்ட்ஸ் பீதியில் உள்ளவர்களுக்கு இப்படி சர்வாதிரிகளின் படங்களைப் பார்த்தால் மேலும் பீதி அதிகரிக்கவே செய்யும்.
இதுதவிர அந்த விளம்பரத்தில் ஆணுறை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த எந்த அறிவுரையும் இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஜெர்மனி டிவிகளில் இந்த 45 விநாடி விளம்பர வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இரவு 9 மணிக்கு மேல்தான் இதைக் காட்ட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications