வீட்டுக் கடனுக்கு வட்டி 1% குறைப்பு!

டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டது.
குறைந்த விலையில் வீடு கட்டுவது, குறைந்த விலை வீடுகளை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்தச் சலுகை அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்படி ரூ. 10 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரையிலான கடனுக்கு ஒரு சதவீத வட்டியை அரசே மானியமாக வழங்கும். இதற்காக ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 லட்சம் பேர் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய வீடு கட்டுவதற்கு மட்டுமின்றி ஏற்கெனவே உள்ள வீட்டை விரிவுபடுத்துவதற்குப் பெறப்படும் கடன்களுக்கும் இந்தச் சலுகை பொறுந்தும்.
இதை தனியார் வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளும் அமலாக்கவுள்ளன.
பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு நிவாரணம்:
அதே போல 1984ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கென ரூ. 714.76 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications