குலாம் நபி ஆசாத், சி.பி.ஜோஷியின் செயல்பாடுகள் - பிரதமர் கடும் அதிருப்தி

தத்தமது துறைகளில் உள்ள முக்கிய திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என்றும் 30 நாட்களுக்குள் இதுதொடர்பாக தனக்கு அறிக்கை தர வேண்டும் எனவும் இரு அமைச்சர்களுக்கும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
சுகாதாரத் துறை அமைச்சர் ஆசாத்தின் செயல்பாடுகள் ஆரம்பத்திலிருந்தே அதிருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அவரது அமைச்சரவையின் செயல்பாடுகள் மிகவும் மந்த கதியில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
பன்றிக் காய்ச்சல் விவகாரத்தில் ஆரம்பத்தில் குலாம் நபி ஆசாத் செய்த குழப்பங்கள் நாடறிந்தது. பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க விறுவிறுப்பான நடவடிக்கை, திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை ஆரம்பத்தில் தீட்டவில்லை.
மேலும், மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டிய ஆசாத், அவர்களை திட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் ஆசாத்தின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ள பிரதமர் அவரை அழைத்து உங்களது செயல்பாடுகள் ஏமாற்றம் அளிக்கிறது. சுறுசுறுப்பாக செயல்பட முயற்சியுங்கள் என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.
அதேபோல ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சி.பி.ஜோஷிக்கும், பிரதமரிடமிருந்து டோஸ் கிடைத்துள்ளது.
ஆசாத்தை அழைத்துப் பேசிய பிரதமர், சுகாதாரத் துறையின் முக்கிய பிரிவுகள் புறக்கணிப்பட்ட நிலையில் இருப்பதை சுட்டிக் காட்டினார். மேலும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நவீனப்படுத்தல் பணியை முடுக்கி விடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஊரக சுகாதார மேம்பாட்டுக்கு முக்கிய கவனம் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல காங்கிரஸ் அரசுக்கு பெரும் பெயர் ஈட்டித் தந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை மேலும் பல மாநிலங்களில் விரிவுபடுத்தி அதை சிறப்பாக செய்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு ஜோஷியிடம் கூறியுள்ளார் பிரதமர்.
தான் சொன்ன வேலைகள் குறித்து 30 நாட்களுக்குள் அறிக்கை தருமாறும் இரு அமைச்சர்களுக்கும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications