வெற்றி..வெற்றி..வெற்றி-தங்கபாலு 'உணர்ச்சிவசம்'
சென்னை: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் தமிழக பயணம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.
இதுதொடர்பாக தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கை:
இளைய சமுதாயத்தின் இணையற்ற தலைவர், அனைவர் நெஞ்சங்களையும் ஈர்க்கும் அருமைத் தலைவர் ராகுலின் கடந்த மூன்று நாள் சூறாவளி சுற்றுப்பயணம் தமிழகத்தில் பேரெழுச்சியை உருவாக்கிய வரலாற்று நிகழ்ச்சியாகும்.
ராகுலின் சுற்றுப்பயணத்தில் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், அனைத்து தரப்பான தொழிலாளர்கள் உட்பட குறிப்பாக பெண்கள் ஆகிய தமிழ் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரையும் தனித்தனியாகவும், குழுக்களாகவும் சந்தித்து அவர்களது நிலைமைகளை அறிந்ததோடு, அவர்களது வாழ்க்கை மேம்பாட்டிற்கு வழிகாணும் தனது விருப்பத்தையும் அவர் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சிகளை நாம் நேரில் பார்த்தோம்.
கல்லூரி மாணவர்கள் முதல் பள்ளிக்கூடம் பயிலும் சிறுவர் சிறுமியர் வரை அவர்களோடு கலந்துரையாடி மகிழ்ந்தது சிறப்புமிகு நிகழ்ச்சிகளாகும். அனைத்திற்கும் மேலாக இளைஞர் காங்கிரசில் இணைந்துள்ள இளைஞர்கள் மத்தியில் அவர் கலந்துரையாடியதும், தமிழக இளைஞர் காங்கிரஸ் தனி அமைப்பும், தனி வாய்ப்பும் கொண்டு சுதந்திரமாக தங்களது நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறையிலான தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிற நிலையில் இளைஞர் காங்கிரஸ் அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றது இளைஞர்கள் மத்தியில் புதிய பண்பாட்டினை உருவாக்கும் நிகழ்ச்சியாகும்.
தமிழகத்தில் காங்கிரஸ் மேலும் வலிமை பெற்று சோனியாவின் தலைமைக்கு அணி சேர்க்கும் வண்ணம் முதல் இயக்கமாக மாற வேண்டும் என்ற விருப்பத்தையும், மீண்டும் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும் என்ற எண்ணத்தையும் கோவை பொதுக்கூட்டத்தில் அவர் அறிவித்த கருத்து மிகச்சிறந்த எழுச்சியை உருவாக்கியுள்ளது.
தமிழ் மக்கள் நலன் கருதி இளைஞர்களோடும், மக்களோடும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு நல்லிணக்கத்தை உருவாக்கிட ராகுல் எடுக்கும் அரும்பெரும் முயற்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும் வழிநெடுக மகிழ்ச்சி பொங்க ராகுலை வரவேற்று வாழ்த்திட்ட நிகழ்ச்சி என் கண்களை விட்டு அகலாதவை.
இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, சோனியா ஆகியோர் மீது எந்த அளவிற்கு பாசத்தை பொழிந்தார்களோ அதைவிடவும் கூடுதலான நேசத்தோடு ராகுலுக்கு வரவேற்பு வழங்கிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என்று கூறியுள்ளார் தங்கபாலு.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications