சயீத் மீது நடவடிக்கை இல்லை- பாக். மீது அமெரிக்காவிடம் இந்தியா புகார்
வாஷிங்டன்: மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சதிகாரர்கள் மீது பாகிஸ்தான் அரசு உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடுத்து லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் உள்ளிட்டோரை சட்டத்தின் முன் நிறுத்த அமெரிக்கா நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
அமெரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ள ப.சிதம்பரம் அங்கு வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தக் கோரிக்கையை வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அஜ்மல் கசாப் தொடர்பான விசாரணை நிலவரத்தை நான் ஹில்லாரிக்கு விளக்கிச் சொன்னேன். மேலும், பாகிஸ்தான் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாததையும் எடுத்துக் கூறினேன். ஹபீஸ் சயீத் இன்னும் சுதந்திரமாக நடமாடி வருவதையும் தெரிவித்தேன்.
மும்பை தாக்குல் சம்பவத்தை இந்தியா அணுகியுள்ள முறையை அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது. பாகிஸ்தான் இந்த சம்பவத்தை எப்படி அணுகியுள்ளது என்பதையும் அமெரிக்கா புரிந்து கொண்டுள்ளது. இதற்கு மேல் அமெரிக்காவுக்கு நாம் விளக்கத் தேவையில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை இதுவே விளக்கிக் காட்டும். இதற்கு மேல் தனியாக விளக்கத் தேவையில்லை.
சயீத் தொடர்பாக இந்தியா ஆறு முறை பாகிஸ்தானிடம் ஆவணங்களை அளித்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் அரசு அந்த ஆவணங்களின்படி சயீத் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் அவர் சுதந்திரமான நபராகவே இருக்கிறார்.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் வரும் ஊடுறுவல்காரர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவும் அமெரிக்காவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மாதத்திற்கு 50 முதல் 60 முறை ஊடுறுவல்கள் நடைபெறுகின்றன. கடந்த மே மாதத்திலிருந்தே ஊடுறுவல் அதிகரித்து வருகிறது.
அதேபோல பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் தீவிரவாதகிளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. மிரட்டல் அளவும் குறையவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து இந்தியா பாதுகாப்புடனும், விழிப்புடனும் இருக்க வேண்டியுள்ளது என்றார்.
--
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications