பாஜக, முஸ்லீம் லீக் நாணயத்தின் இரு பக்கங்கள் - காங்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாஜகவும் சரி, ஜின்னாவின் முஸ்லீம் லீகும் சரி, இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்று கூறியுள்ளது காங்கிரஸ் கட்சி.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்., ஜன சங்கம், பாஜக ஆகியவை ஒப்புக்குத்தான் இரு நாடு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உண்மையில் இரு நாடாக இந்தியா பிரிய வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது. அதற்காக கொடி பிடித்தவர்கள் அவர்கள்.
தற்போது பாஜகவில் ஏற்பட்டுள்ள விரிசல்கள், வெடிப்புகள் அந்தக் கட்சியை விரைவில் நீர்த்துப் போகச் செய்து விடும். அதன் பின்னர் இரு நாடு கொள்கை குறித்த மிச்சம் மீதமும் மறைந்து போய் விடும்.
காங்கிரஸ் கட்சி ஒருபோதும் இரு நாடு கொள்கையை ஆதரித்ததில்லை. இந்த விஷயத்தில் ஜின்னாவைக் காப்பாற்ற ஜஸ்வந்த் சிங் போன்றவர்கள் முயலுகிறார்கள் என்றார் திவாரி.












Click it and Unblock the Notifications