மனைவியை எரித்து கொன்ற போலீஸ்காரர்
சென்னை: மனைவியை எரித்துக் கொலை செய்துவிட்டு, அதை சமையல் செய்யும்போது ஏற்பட்ட கேஸ் விபத்து மரணம் போல நாடகமாடிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
சென்னை மணலியில் போக்குவரத்துப் பிரிவு போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் துரைமுருகன் (37). இவர் தனது மனைவி புவனேஸ்வரி (32), மகள்கள் பிரியங்கா (7), மித்ரா (6) ஆகியோருடன் கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.
திருத்தணி அருகே கிராமத்தில் வசித்து வரும் புவனேஸ்வரியின் தாயார் தேசம்மாள் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க புவனேஸ்வரி விரும்பினார்.
இதற்கு துரைமுருகன் எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து நேற்று இரவு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அனைவரும் தூங்கிவிட்டனர். இந் நிலையில் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த புவனேஸ்வரியின் தலையில் இரும்பு கம்பியால் ஓங்கி அடித்துள்ளார் துரைமுருகன். இதில் அவர் மயங்கி விழுந்தவுடன் அவரை சமையல் அறைக்குள் இழுத்துச் சென்று பெட்ரோலை ஊற்றி உடலுக்குத் தீ வைத்துள்ளார். இதில் உடல் கருகி புவனேஸ்வரி இறந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் பால் காய்ச்சும்போது கேஸ் கசிந்து தீவிபத்து ஏற்பட்டு மனைவி இறந்துவிட்டதாக நாடகமாடினார்.
ஆனால், அதை நம்பாத அக்கம் பக்கத்து வீட்டு போலீஸ் குடும்பங்கள் உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் தந்தனர்.
கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துரைமுருகனை கைது செய்தனர்.
இது கேஸ் விபத்து போல தெரிய வேண்டும் என்பதற்காக சிலிண்டரின் டியூபை அறுத்துள்ளார் துரைமுருகன். மேலும் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து வந்து புவனேஸ்வரி மீது ஊற்றி தீ வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications