வேளாண்மை மன்ற சட்டம்: அடுத்த சட்டசபை கூட்டத்தில் வாபஸ் வேண்டும்-ஜெயலலிதா

இது தொடர்பாக கொடநாட்டில் இருந்தபடி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச்சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க் கட்சிகளின் சார்பிலோ, தோழமைக் கட்சிகளின் சார்பிலோ யாரும் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட போதிலும், விவசாயப் பெருங்குடி மக்களின் எண்ணங்களுக்கும், பத்திரிகையாளர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்திடும் வகையில் மேற்படி சட்டம் அறிவிக்கை செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.
தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச்சட்ட முன்வடிவு 21.7.2009 அன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்காக மேற்படி சட்டத்தை சுற்றுக்கு அனுப்ப வேண்டும் என்ற திருத்தம் அதிமுகவைச் சேர்ந்த சேலம்-1 தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரனால் முன் மொழியப்பட்டு, கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரால் வழி மொழியப்பட்டது.
மேற்படி சட்ட முன்வடிவின் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் வேலுசாமி “வேளாண் தொழிலை முறைப்படுத்துவதற்காகவும், அதில் ஈடுபடுபவர்களின் பெயர்களைப்பதிவு செய்வதற்காகவும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வருவது தேவையற்றதாகும். வேறு எங்குமே இல்லாத ஒரு சட்டத்தை இங்கே கொண்டு வருவதால் எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை. எனவே, இந்த சட்ட முன் வடிவு தேவையற்றது என்று கூறி, இதனைக் கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் முன்மொழிந்த திருத்தம் தோல்வியுற்றதாக பேரவைத்தலைவர் அறிவித்து இருக்கிறார்.
இவற்றை 21.7.2009 நாளைய சட்டமன்ற நடவடிக்கைகள் குறிப்புகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
21.7.2009 அன்று மூன்று மணி நேரத்தில் 30 சட்ட முன்வடிவுகள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. சராசரியாக ஒரு சட்ட முன்வடிவிற்கு 6 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், மேற்படி சட்ட முன்வடிவை எதிர்த்து அதிமுக சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதையெல்லாம் முழுவதுமாக மறைத்துவிட்டு, மேற்படி சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்புகளைப் பார்க்காமல் இது போன்ற அறிவிப்பை வெளியிடுகிறாரா என்று தெரியவில்லை.
தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டத்தை அறிவிக்கை செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளதன் மூலம், அதிமுக கோரிக்கை ஏற்கப்பட்டு, பாரம்பரிய விவசாய முறை தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டுள்ளது.
எனினும், பாரம்பரிய விவசாய முறையை நிரந்தரமாக பாதுகாக்கும் வகையில், மேற்படி சட்டத்தை திரும்பப்பெறும் சட்ட முன்வடிவை அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளின் சார்பில் திமுக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications