டயர்களுக்கு யுஎஸ்ஸில் 35% கூடுதல் வரி: டென்ஷனில் சீனா
வாஷிங்டன்: சீனாவில் தயாராகி வரும் டயர்களுக்கு 35 சதவிகித கூடுதல் வரி விதிக்க ஆரம்பித்துள்ளது அமெரிக்கா. இதனால் இரு நாடுகளுக்கிடையே பெரும் மோதல் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் இந்தச் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என சீனா அறிவித்துள்ளது.
சீனாவிலிருந்து அதிக அளவு டயர்களை அமெரிக்க நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன. இதனால் அமெரிக்க டயர் உற்பத்தி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையை மாற்ற முடிவு செய்த அதிபர் பாரக் ஒபாமா, சனிக்கிழமையன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு சீனாவிலிருந்து இறக்குமதியாகும் டயர்களுக்கு 35 சதவிகித கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவின் விற்பனை பிரதிநிதிகளின் (USTR) பரிந்துரையின் பேரில் இது நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பு சீனாவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறுவது என்றும் அந்நாட்டு வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆனால், இதில் விதி மீறல் ஏதுமில்லை என்றும், சீனாவும் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்ட உடன்பாட்டின்படி உள்ளூர் தொழில்களைக் காக்கும் நடவடிக்கையில் ஒன்றாகவே, இந்தக் கூடுதல் வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பதிலளித்துள்ளார்.
இந்தியாவில் ஏற்கெனவே சீன மொபைல்கள், மருந்துகள், பொம்மைகள், பைக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications