'வஸ்த்ரகலா' பட்டு-போத்திஸ் அறிமுகம்

இந்த சேலையின் விளம்பர தூதராக நடிகை ஹேமாமாலினி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சேலை அறிமுக விழாவில் பல துறை சார்ந்த பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அனுராதா ஸ்ரீராம், உமா முரளிகிருஷ்ணா, அனிதா உதிப், சாருலதா மன், டாக்டர் பிரியா செல்வராஜ், அருணா கிருஷ்ணன், லதா மேனன், எரும் அலி, நீனா ரெட்டி என அவர்கள் அனைவரும் மேடையில் வஸ்த்ரகலா சேலையில் தோன்றி அசத்தினர்.
இந்தப் பட்டுச் சேலையின் விலை ரூ.10 ஆயிரத்தில் துவங்கி ரூ.2 லட்சத்தை தாண்டி செல்கிறது.
இதை தயாரிக்கும் எண்ணம் தங்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஏற்பட்டதாக போத்திஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்த சேலையின் அறிமுக விழாவில் அவர் பேசுகையில்,
வஸ்த்ரகலா பட்டில் வட இந்தியாவில் உள்ள சுவரோஸ்கி, மீனாக்காரி, குந்தன், போல்கன் போன்றவற்றின் வேலைபாடுகளை காணலாம்.
இந்த பட்டு தென் இந்தியா, வட இந்தியா கலாசாரங்களை இணைப்பதால் தெற்கே பிறந்து, வடக்கே சினிமா, நாட்டியம், அரசியல் என பல துறைகளில் புகழ் பெற்று திகழும் நடிகை ஹேமாமாலினியை இதன் விளம்பர தூதராக நியமித்துள்ளோம். வடக்கும், தெற்கும் பட்டில் சங்கமிக்கிறது என்றார்.
சேலை தான் அழகு-ஹேமாலினி...
விழாவில் கலந்து கொண்ட ஹேமாமாலினி கூறுகையில்,
சேலையில் பெண்கள் அழகாக தெரிவார்கள். பெண்களுக்கு சேலை தான் அழகு. அந்த வகையில் இந்திய பெண்கள் அனைவரும் அதிர்ஷ்டக்காரர்கள். நான் அனைத்து வகை சேலைகளையும் அணிந்துவிட்டேன்.
வஸ்த்ரகலா பட்டுக்கு என்னை விளம்பர தூதராக அழைத்தார்கள். யோசிக்காமல் சம்மதம் தெரிவித்துவிட்டேன். அந்த பட்டின் நேர்த்தி கண் இமைக்காமல் பார்க்க தூண்டுகிறது.
நான் அழகுடன் திகழ்வதற்கு நல்ல எண்ணமும், ஒழுக்கமும் தேவை. கடவுள் கொடுத்த அழகை தொடர்ந்து பராமரிப்பதால் தான் இன்றும் அழகாக இருக்கிறேன் என்றார்.
இனி தமிழ் சினிமாவில் நடிப்பீர்களா என்று கேட்டபோது, அதற்கான காலம் முடிந்துவிட்டது என நினைக்கிறேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications