சென்னை-விஷவாயு தாக்கி 2 பணியாளர்கள் பலி
சென்னை: சென்னையில் கிணற்றில் தூர்வார சென்ற இரண்டு துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பலியானார்கள்.
இந்த சம்பவம் ஜெ.ஜெ. நகரில் உள்ள கலைவாணர் நகர் பகுதியில் ந்டந்துள்ளது.
இங்குள்ள தனியாருக்கு சொந்தமான கிணறு ஒன்றில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் கிணற்றில் இருந்து எதிர்பாராத விதமாக விஷவாயு வெளியானதை அடுத்து வேலையில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளிகள் பரிதாபமாக இறந்துள்ளனர்.
இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஷவாயு தாக்கி பலியாகும் சம்பவங்களில் பெரும்பாலும் பாதாள சாக்கடைகளை சுத்தப்படுத்தும் தொழிலாளர்கள் தான் பலியாகி வருகின்றனர். அரிதாக இது போன்ற பாழும் கிணறுகளை சுத்தப்படுத்துபவர்களும் பலியாகி வருகின்றனர்.
இதையடுத்து இந்த மாத துவக்கத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இதை தடுக்க என்ன வழிகள் என்பதை ஆராய 13 பேர் கொண்ட குழுவை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications