மீண்டும் ஊதியத்தை உயர்த்தும் ஐடி நிறுவனங்கள்!

சில தினங்களுக்கு முன்புதான் முக்கிய ஐடி நிறுவனமான விப்ரோ, தனது பணியாளர்களுக்கு நிறுத்தி வைத்திருந்து சம்பள உயர்வை வழங்க ஒப்புக் கொண்டது. இதனைத் தொடர்ந்து நடுத்தர ஐடி நிறுவனங்களான எம்பஸிஸ்- இடிஎஸ், சோனாட்டா சாஃப்ட்வேர்ஸ் மற்றும் சிம்பனி சர்வீஸஸ் போன்றவையும் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்கியுள்ளன.
மேலும் சிறந்த முறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 15 முதல் 20 சதவிகிதம் வரை சம்பள உயர்வு வழங்கவும் இந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
நான்காம் காலாண்டில் பணியாளர்களின் திறமை மற்றும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம் அதிகரித்தால் மீண்டும் போனஸ் மற்றும் சம்பளமும் உயர்த்தப்படும் என்று எம்பஸிஸ் தலைவர் இளங்கோ தெரிவித்தார்.
சம்பளம் குறித்த பட்ஜெட் தயாரானவுடன் அனைத்து பணியாளர்களுக்கும் 7 முதல் 8 சதவிகித சம்பள உயர்வை அளிக்க முடிவு செய்துள்ளதாக சிம்பனி சர்வீஸஸ் நிறுவனத்தின் மகாலிங்கம் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications