பெங்களூர் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட குழந்தை
பெங்களூர்: பெங்களூரில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒன்றரை வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக இரவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து அங்குள்ள குடிசை வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி நின்று வருகிறது.
திருவண்ணாமலையை சேர்ந்த வரதராஜ், பெங்களூர் கோடிசிக்கனஹள்ளி பகுதியில் ஆர்.ஆர். குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த குடியிருப்பின் அருகே உள்ள காலி நிலத்தில் குடிசை அமைத்து தனது மனைவி லட்சுமி, குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இத் தம்பதியின் ஒன்றரை வயது மகன் விஜய்.
நேற்று காலை 7 மணியளவில் விஜய் வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்தபோது சாக்கடையில் தவறி விழுந்தான்.
இந்த சாக்கடையின் அருகே தான் மாபெரும் பி.டி.எம். ஏரி உள்ளது. சாக்கடை கால்வாயில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் விஜயை வெள்ளம் இழுத்துச் சென்றது.
இதையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தரப்பட்டு கால்வாயில் விஜயை தேடும் பணி நடந்தது. ஆனால், இன்று காலை வரை உடல் கிடைக்கவில்லை.
இந்தக் கால்வாயைச் சுற்றி சுவர் கிடையாது, ஏரியைச் சுற்றிலும் தடு்ப்பும் கிடையாது.
பெங்களூரில் சாலைகளி்ல் பாதாள சாக்கடை மூடிகள் திறந்து கிடக்கும். மழை நேரத்தில் அது திறந்திருப்பது தெரியாமல் அதில் விழுந்து பலியானவர்கள் நூற்றுக்கணக்கில். ஆனாலும் அதைப்பற்றியெல்லாம் பெங்களூர் மாநகராட்சி கவலைப்படுவதும் இல்லை.
கர்நாடக ஊராட்சி அமைப்பு நாட்டிலேயே மிக மிக ஊழல் மலிந்த ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.
கடந்த 3 மாதத்திற்கு முன் இதேபோல பலத்த மழையின்போது பெங்களூர் லிங்கராஜபுரத்தை சேர்ந்த சிறுவன் அபிஷேக் (6) நீரில் அடித்து செல்லப்பட்டான். அவனது உடலை தீயணைப்பு படை வீரர்கள், ராணுவ வீரர்கள் ஒரு மாதமாக கால்வாய்களிலும் அது போய் சேரும் அல்சூர் ஏரியிலும் தேடினார்கள். ஆனால் சிறுவனின் உடல் கிடைக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications