பதவியை துறந்து எம்எல்ஏ ஆக அழகிரி திட்டமா?

சென்னை மாநகர காவல்துறையின் கூடுதல் ஆணையராக இருந்தவர் ஏ.கே.விஸ்வநாதன். இவர் கூடுதல் ஆணையராக இருந்தபோதுதான் உயர்நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்தது.
இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இவரும் இணை ஆணையர் பாலசுப்ரமணியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந் நிலையில் விஸ்வநாதனை தனது சிறப்பு அதிகாரியாக நியமித்து டெல்லிக்கு வரவழைத்தார் அழகிரி. ஆனால் இந்த நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் கமிட்டியின் ஒப்புதல் கிடைக்கவில்லை. ஆனாலும் இதை மீறி அழகிரி விஸ்வநாதனுக்கு பணி அளித்திருந்தார்.
இந் நிலையில் தற்போது விஸ்வநாதனை நீக்குமாறு பிரதமர் அலுவலகம் அழகிரிக்கு உத்தரவிட்டுள்ளதாம். விஸ்வநாதன் இணை செயலாளர் அந்தஸ்தில் இருப்பவர். அவரை சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்க முடியாது என்று டெக்னிகல் விஷயத்தை சுட்டிக் காட்டி பிரதமர் அலுவலகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாம்.
ஏற்கனவே அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச முடியும். தாய் மொழியில் பேச முடியாது என்று லோக்சபா செயலகம் தெரிவித்துள்ளதால் கடும் அப்செட்டில் உள்ள அழகிரிக்கு இந்த பிரதமர் அலுவலக உத்தரவும் எரிச்சலைத் தந்துள்ளதாம்.
இப்படி டெல்லியில தனக்கு எதிரான சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டிருப்பதால், அதிருப்தி அடைந்துள்ள அழகிரி, பேசாமல் மாநில அரசியலுக்கேத் திரும்பி விடலாமா என்ற யோசனையில் இருப்பதாகக் கூட கூறப்படுகிறது.
அவர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு விரைவில் நடைபெறவுள்ள திருச்செந்தூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடக் கூடும் எனவும் பேசப்படுகிறது.
ஆனால், இதை திமுக வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுக்கின்றன. அழகிரிக்கு போராடித்தான் பழக்கம். அவர் எதையும் பாதியில் வந்துவிடும் நபர் அல்ல. டெல்லியில் அவருக்கு எதிராக காய் நகர்த்துபவர்களுக்க அவர் உரிய சமயத்தில் 'திருப்பித் தருவார்' என்கிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications