புகார் கொடுத்த நபருக்கு அடி-உதை: இன்ஸ்பெக்டருக்கு சம்மன்
மதுரை: காரைக்குடியில், ஒரு வழக்கு சம்பந்தமாக புகார் தந்த நபரையே காவல் நிலையத்தில் அடைத்து வைத்த இன்ஸ்பெக்டர் சிவக்குமார் என்பவரை நேரில் ஆஜராகும்படி, மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சிவில் சப்ளை குடோனை சேர்ந்தவர் மாரிமுத்து. பில் கலெக்டர். இவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது
நான், வேலாயூரணியை சேர்ந்த பாலு என்பவரிடம் 17 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தேன். அதற்கு, வங்கி செக், புராமிசரி நோட் எழுதி கொடுத்தேன்.
கடனுக்காக, 10 சதவீத வட்டி செலுத்தினேன். கடனை முழுமையாக செலுத்திய பிறகும், வங்கி செக், புராமிசரி நோட்டுகளை தர பாலு மறுக்கிறார். கூடுதல் வட்டி கேட்டும், எனது வீட்டை அவருக்கு விற்கும்படியும் மிரட்டி வருகிறார்.
கூடுதல் வட்டி கொடுக்காவிட்டால், வேறு ஒருவர் மூலம், கோர்ட்டில் என் மீது செக் மோசடி வழக்கு பதிவு செய்ய போவதாகவும் பாலு மிரட்டுகிறார்.
இது குறித்து, தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றம் கிளை உத்தரவிட்டும், என் புகாரை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரிக்கவில்லை.
இதன் பிறகு, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். என் புகார் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது.
அதன்படி வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர், புகாரை வாபஸ் பெறும்படி என்னை மிரட்டி வருகிறார். விசாரணைக்காக சென்ற என்னையும், சாட்சிகள் செந்தூர்பாண்டி, பாண்டியையும் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் சிறை வைத்தார்.
அவர் என் புகாரை தொடர்ந்து விசாரித்தால், உண்மை வெளிவராது. எனவே, எனது புகாரை, வேறு புலனாய்வு பிரிவினர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி இன்ஸ்பெக்டர் சிவக்குமாரை, செப்டம்பர் 30 ம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications