1 மணி நேரத்திற்கு 27 பேருக்கு வேலை பறிபோகிறது

Subscribe to Oneindia Tamil

Job mkt still grim, 27 people lose job per hour
நியூயார்க்: உலக வேலைச் சந்தை இன்னும் சரியாகவில்லை. அமெரிக்க பொருளாதாரம் சற்றே மேம்பட்டு வருகிற போதிலும் கூட ஒரு மணி நேரத்திற்கு 27 பேருக்கு வேலை போய்க் கொண்டிருக்கிறதாம்.

பொருளாதார நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் பொருளாதார நிலை லேசான முன்னேற்றப் பாதைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் வேலையிழப்பு, ஆள் குறைப்பு இன்னும் குறைந்தபாடில்லை.

தங்களது நிறுவனங்களைக் காக்கும் நோக்கில் பெரும்பாலான நிறுவனங்கள் தொடர்ந்து ஆள் குறைப்பை மேற்கொண்டபடி உள்ளன.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட பல நிறுவனங்கள் செப்டம்பர் மாதம் மட்டும் 13,000 பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளனவாம்.

அதிலும் 20 நாட்களில் 12,900 பேர் வேலையை இழந்துள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 645 பேரை வேலையை விட்டு தூக்கியுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 27 பேர் வேலை இழந்து வருகின்றனர்.

பார்மசி முதல் சாப்ட்வேர் வரை பல துறைகளிலும் பாரபட்சமின்றி வேலையிழப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+