பெண் குழந்தை தத்தெடுப்பு-'இந்து' சிக்கலை தீர்த்த கோர்ட்
மும்பை: இந்து சமயத்தில் பெண் குழந்தை வைத்திருப்பவர்கள் மற்றொரு பெண் குழந்தையை தத்தெடுப்பதில் இருக்கும் தடையை நீக்கி மும்பை உயர் நீதிமன்றம் புதிய தீர்ப்பளித்துள்ளது.
இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் படி பெண் குழந்தை வைத்திருக்கும் பெற்றோர்கள் பெண் குழந்தையை தத்தெடுக்க முடியாது. அதேபோல் ஆண் குழந்தை வைத்திருப்பவர்கள் ஆண் குழந்தையை தத்தெடுக்க முடியாது.
இதை எதிர்த்து சமீபத்தில் உயர் மும்பையை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத நடிகர் மற்றும் அவரது மனைவி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த தம்பதியருக்கு ஏற்கனவே 2 வயது குழந்தை ஒன்றுள்ளது. இந்நிலையில் அவர்கள் கடந்த 2005ல் ஒரு அனாதை சிறுமியை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தனர். ஆனால், அதற்கு சட்டம் குறுக்கே நி்ன்றதால் வழக்கு தொடுத்துள்ளனர்.
அவர்கள் இந்த குழந்தையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தங்களுக்கு தத்தெடுக்கும் உரிமை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தை கேட்டு கொண்டனர். இதன்மூலம் பல குழந்தைகளுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என அவர்களது வக்கீல் விஷால் கானடே வாதிட்டார்.
இதை விசாரித்த நீதிபதி சந்திரசூட் அளித்த தீர்ப்பில்,
இந்து குழந்தை தத்தெடுப்பு குறையில் இருக்கும் இந்த தடை நீக்கப்படுகிறது. இதன்மூலம் குழந்தை தத்தெடுப்பை உற்சாகப்படுத்த முடியம் என நம்புகிறோம். அனாதை குழந்தைகளுக்கு ஒரு நல்ல வாழ்வு அமைய இது உதவும்.
பல தத்தெடுப்பு சட்டங்களை ஆலசி ஆராய்ந்த பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு, குழந்தைகள் உரிமை சட்டம் 1992 ஆகியவற்றையும் கணக்கில் எடுத்து கொண்டோம்.
தத்தெடுப்பு என்பது ஒரு குழந்தையின் வாழ்வுக்கான உரிமை. சுதந்திரம். ஒரு குழந்தையின் வாழ்க்கை என்பது மற்ற அனைத்தையும் விட அதிக முக்கியவத்துவம் வாய்ந்தது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications