லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத்தின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு
லாகூர்: நாளுக்கு நாள் சயீத் மீது கடும் நடவடிக்கை எடுக்க அமெரிக்காவிடமிருந்து நெருக்குதல் அதிகரித்து வருவதால் முதலில் வழக்குப் பதிவு செய்த பாகிஸ்தான் அரசு தற்போது ஹபீஸ் சயீத்தின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலின் மூளையான சயீத்தின் நிழல் மீது நடவடிக்கை எடுக்கக் கூட பாகிஸ்தான் ரொம்பவே தயங்கி வருகிறது. இதனால் இந்தியா பொறுமை இழந்து வருகிறது. தனது புலம்பலை அமெரிக்காவிடம் இந்தியா ஆதாரங்களுடன் கொட்டித் தீர்த்துள்ளது.
இதையடுத்து பாகிஸ்தானை அமெரிக்கா நெருக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சமீபத்தில் சயீத் மீது 2 வழக்குகளைப் பதிவு செய்தது பாகிஸ்தான் அரசு.
இந்த நிலையில் தற்போது சயீத்தின் நடமாட்டத்திற்கு பல கட்டுப்பாடுகளை அது விதித்துள்ளது.
லாகூரின் ஜோஹர் டவுன் பகுதியில் உள்ள சயீத்தின் வீட்டுக்கு வெளியே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர் ரம்ஜான் தொழுகைக்காக வெளியில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சயீத் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் மீடியா செய்தி வெளியிட்டு வருகிறது.
இருப்பினும் இதை அரசுத் தரப்பு உறுதிப்படுத்தவில்லை. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சயீத்தின் நடமாட்டத்திற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. கடாபி ஸ்டேடியத்தில் நடைபெறும் ரம்ஜான் தொழுகையை தலைமையேற்று நடத்த அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications